காலியில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை
காலி - தமன்கடுவை பகுதியில் இடம்பெற்ற மோதலில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குடும்பஸ்தருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே நீண்ட நாள்களாக இருந்து வந்த பணப் பரிமாற்றம் தொடர்பான ஒரு முறுகல் நிலையே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
நேற்று ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பாக மாறி கொடூரமான தாக்குதலில் முடிந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி தற்சமயம் தலைமறைவாகியுள்ளனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri