மகிந்தவின் தற்போதைய நிலை.. இரகசியம் பேணும் மொட்டுத்தரப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர், ஒரு நபரின் மருத்துவ நிலை தொடர்பான விவரங்களை வெளியிட மருத்துவ நிபுணர்களுக்கும் சம்பந்தப்பட்ட வல்லுநர்களுக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறினார்.
தனிப்பட்ட பாதுகாப்பு
மேலும், "மகிந்த ராஜபக்ச தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால், அவரது தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம், எனவே மேலதிக விவரங்களைத் தெரிவிக்க முடியாது.
தற்போதைக்கு என்னால் கூற முடிவது என்னவென்றால், மகிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நான் அவரது தனியுரிமையையும் பாதுகாப்பையும் மதிக்க வேண்டியிருப்பதால், தற்போதைக்கு இந்தத் தகவலை மட்டுமே வெளியிட முடியும்" என்று குறிப்பிட்டார்.
you may like this video