போலி காப்புறுதி முகவர்கள் குறித்து விசாரிக்குமாறு கோப் குழு கோரிக்கை!
2009ஆம் ஆண்டு போலி காப்புறுதி முகவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இதன் தற்போதைய நிலை என்னவென்பதை விசாரிக்குமாறு பொது நிறுவனங்களுக்கான கோப் குழு, இலங்கை காப்புறுதி நிறுவனத்திடம் கோரியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து குற்றப்புலனாய்வுத்துறையிடம் கேட்குமாறு கோப் தலைவர் ரஞ்சித் பண்டார, இலங்கை காப்புறுதி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
இது தொடர்பாகக் கடந்த 2009ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாடு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், மாலைத்தீவு மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பெரும் நிதி இழப்பைச் சந்தித்த இரண்டு கிளைகள் மூடப்பட முடிவெடுக்கப்பட்டபோதும், இன்னும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே, அது குறித்துக் கண்காணிப்பை மேற்கொள்ள கோப் குழு தீர்மானித்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
