ஐரோப்பிய நாடுகளில் பரவும் போலி நாணயத்தாள்கள்
போலி நாணயத்தாள்கள், மனித கடத்தல் மற்றும் ஏவுகணை உதிரிபாகங்கள் விநியோகம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தானியர்கள் உலகளாவிய கடத்தலில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளாவிய போலி நாணய மோசடியில் ஈடுபட்ட பல பாகிஸ்தானிய பிரஜைகள் ஸ்பெயின் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டதை அடுத்து குறித்த வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போலி யூரோ நாணயத்தாள்களை ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பல நாடுகளுக்கு விநியோகம் செய்த மோசடி மோசடியின் விபரங்களை வெளிக்கொண்டுவர முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
போலி நாணயத்தாள்கள் விநியோகம்
பிரத்யேக மை பயன்படுத்தி அச்சடிக்கப்பட்ட நாணயத்தாள்கள் தெளிவாக வடிவமைக்கப்பட்டு இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு நேபாளம், ரோம், ஸ்பெயினின் பார்சிலோனா ஆகிய நாடுகளை சேர்ந்த கடத்தல்காரர்களால் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது.
கடந்த நவம்பரில் பார்சிலோனாவில் உள்ள விமான நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் 70,000 யூரோ மதிப்புள்ள போலி நாணயத்தாள்கள் விநியோகஸ்தர்களை கைப்பற்றியதை அடுத்து இத்தாலி மற்றும் கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.