ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி : புடின் கூறிய பதில்
ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு படைகளை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலிருந்து பிரான்ஸ் படைகள் திருப்பி அனுப்பப்படுவதை ரஷ்ய ஜனாதிபதி புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்ய உக்ரைன் போரைத்தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்குமிடையிலான நட்பில் பிரிவு உருவானது. நண்பர்களாக அவ்வப்போது சந்தித்துக்கொண்ட, தொலைபேசியில் உரையாடிக்கொண்ட மேக்ரானும் புடினும், இப்போது எதிரிகள் போல பேட்டிகள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வகையில், ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு படைகளை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் சமீபத்தில் கூறியிருந்தார்.
வெளியேறும் பிரான்ஸ் படைகள்
அதற்கு பதிலடி கொடுத்துள்ள புடின், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலிருந்து பிரான்ஸ் படைகள் திருப்பி அனுப்பப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மாலி முதல் சமீபத்தில் நைஜர் வரையிலான பல ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் அனுப்பியிருந்த ராணுவ வீரர்களை அந்நாடுகள் திருப்பி அனுப்பிவிட்டன.
அது மட்டுமின்றி, பிரான்ஸ் படைகளை வெளியேற்றிய அந்நாடுகளின் தலைவர்கள், ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்துவருகிறார்கள்.
மேக்ரானை குத்திக்காட்டும் வகையில், பிரான்ஸ் படைகள் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள புடின், தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
