நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு: அரசின் தீர்மானத்தை முற்றாக எதிர்க்க சட்டத்தரணிகள் சங்கம் முடிவு

Government Of Sri Lanka High Court of Sri Lanka
By Rakesh Jul 30, 2026 04:32 AM GMT
Report

இலங்கையிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு வருடங்களால் நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை முற்றாக எதிர்க்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் மிக முக்கிய விடயமாகும் என்றும், நீதித்துறை சார்ந்த பதவிகள் தொடர்பான அரசமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மேற்படி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

அமைச்சரவை ஒப்புதல்

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கலாக நாட்டின் சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான அரசின் யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு: அரசின் தீர்மானத்தை முற்றாக எதிர்க்க சட்டத்தரணிகள் சங்கம் முடிவு | Extension Of Retirement Age Of Judges

இந்த விவகாரம் கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள பின்னணியில், இது பற்றி ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் நேற்று முற்பகல் 11 மணிக்குக் கொழும்பில் உள்ள சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது.

இதன்போதே நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை முற்றாக எதிர்க்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்

01. நீதித்துறையின் சுயாதீனத்தன்மை: இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது அரசமைப்பின் அடிப்படைத் தூணாகும். அத்தோடு, சட்டத்தின் ஆட்சி, அரசமைப்பு அடிப்படையிலான ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இது இன்றியமையாததாகும்.

02. கலந்தாலோசனையின்மை:இந்த யோசனை நீதித்துறை, சட்டத்தரணிகள் சமூகம், கல்வியியலாளர்கள், சிவில் சமூகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவான கலந்தாலோசனைகள் இன்றியும், சுயாதீன மற்றும் அரசமைப்பு ரீதியிலான பரிசீலனைகள் இன்றியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு: அரசின் தீர்மானத்தை முற்றாக எதிர்க்க சட்டத்தரணிகள் சங்கம் முடிவு | Extension Of Retirement Age Of Judges

03. பரிந்துரைக்கப்படாத திருத்தம்: நீதி அமைச்சால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின் நீதித்துறை பற்றிய மதிப்பீடு மற்றும் மூலோபாய நடவடிக்கைத் திட்டம்' ஊடாக பல்வேறு கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் அடையாளங்காணப்பட்டிருந்த போதிலும், அதில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரித்தல் ஒரு முக்கிய திருத்தமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை.

04. உண்மையான பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்துதல்: நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றுவதை விடுத்து, நீதிபதி வெற்றிடங்கள், வழக்கு விசாரணைகளில் தாமதம், போதிய வளமின்மை, தொழில்நுட்ப நவீனமயமாக்கல் இன்மை போன்ற உண்மையான பிரச்சினைகளுக்கே விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அத்தோடு, தற்போது நிலவும் நீதிபதி வெற்றிடங்கள் அரசமைப்புக்கு அமைவாக விரைவாக நிரப்பப்பட வேண்டும்.

05. வெளிப்படைத்தன்மையின் அவசியம்: நீதி நிலைநாட்டப்படல் தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கையானது நீதித்துறையின் உண்மையான சுயாதீனத்துவத்தில் மாத்திரமன்றி, அந்த சுயாதீனத்துவம் வெளிப்படையாகப் புலப்படுவதிலும் தங்கியுள்ளது என்று அந்தத் தீர்மானத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு பிறந்த நாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! வங்கி கணக்கிலிருந்து கைமாற்றப்பட்ட பணம் - சிக்கிய சந்தேகநபர்

கொழும்பு பிறந்த நாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! வங்கி கணக்கிலிருந்து கைமாற்றப்பட்ட பணம் - சிக்கிய சந்தேகநபர்

வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஆபத்தான பொருள்..! பொலிஸ் பரிசோதகர் அதிரடியாக கைது

வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஆபத்தான பொருள்..! பொலிஸ் பரிசோதகர் அதிரடியாக கைது

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US