உக்ரைன் தலைநகரில் ஊரடங்கு சட்டம் நீட்டிப்பு!
உக்ரைன் மீது ரஷ்யா 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்ய தாக்குதலில் இழந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உக்ரைன் படைகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், போலந்து நாட்டின் எல்லையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லவீவ் நகரில் ரஷிய படையினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
உக்ரைன் தலைநகர் கீவில் ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்படுவதாக நகர மேயர் Vitali Klitschko அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் மார்ச் 26 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மார்ச் 28 திங்கட்கிழமை காலை 7 மணி வரை கீவ் நகரில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என மேயர் Vitali Klitschko அறிவித்துள்ளார்.