வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணீர்ப்புகைக்குண்டுகள் தொடர்பில் வெளியான தகவல்
பொலிஸ் பிரிவின் வசம் உள்ள கண்ணீர்ப்புகை குண்டுகளின் கையிருப்பில் 70 சதவீதம் காலாவதியாகிவிட்டதாக பொலிஸ் தலைமையக வட்டார தகவல்களில் வெளியாகியுள்ளன.
இருப்பினும், நாட்டில் கலவரங்களை அடக்குவதற்குத் தேவையான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பொலிஸ் பிரிவிடம் உள்ளதாகவும் தலைமையகம் கூறுகின்றது.
ஐந்து ஆண்டுகளுக்கு இறக்குமதி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகள், மார்ச் 22 முதல் ஜூலை 2022 போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பின்னர் பயன்படுத்தப்படாமையினால் காலாவதியாகிவிட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

அவசர கொள்முதல்களின் கீழ் வெளிநாடுகளிலிருந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வாங்கப்படுவதாகவும், அந்த கண்ணீர்ப்புகைக்குண்டுகள் பொலிஸ் களப்படை தலைமையகத்தால் நாடு முழுவதும் உள்ள கலவரத் தடுப்புக் பொலிஸ் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் தலைமையகம் கூறுகின்றது.
மேலும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கண்ணீர்ப்புகைக் குண்டின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் என்றும் கூறப்படுகின்றது.
கண்ணீர்ப்புகை குண்டுகள் காலாவதி
இவை காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தெரிவிக்கின்றது.
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் போராட்டங்களை அடக்குவதற்கு கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும், இதன் காரணமாக பொலிஸ் வசம் இருந்த சில கண்ணீர்ப்புகை குண்டுகள் காலாவதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri