குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வீடுதிரும்பிய முன்னாள் அமைச்சர்கள்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்களான ரொஷான் ரணசிங்க, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் வீடு திரும்பியுள்ளனர்.
தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த மோசடிச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தொடர் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
அதன் பிரகாரம் இன்றைய தினம் அவர் இரண்டாவது நாளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதே நேரம் இன்றைய தினம் விசாரணைகளின் பின்னர் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்தும் வெளியேறியுள்ளார்.
அதே போன்று இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பான ஊழல் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் விசாரணைகளை முடித்துக் கொண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
