அநுர அரசின் அடுத்த இலக்கு! கிழக்கின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதி கைதாவாரா..!
கிழக்கு மாகாணத்தின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியொருவரை அடுத்துக் கைது செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதன் பிரகாரம் தற்போதைய நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட புலனாய்வுத்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அரசியல்வாதி தொடர்பான தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு நாளாந்த அறிக்கையொன்றும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது.
புலனாய்வுத்துறை வட்டாரம்
காணி மோசடி அல்லது பயங்கரவாதம், சட்டவிரோத செயற்பாடுகளை ஊக்குவித்தமை, நிதி மோசடி, பணச்சலவை ஆகிய குற்றச்சாட்டுகளில் ஒன்றையோ பலவற்றையோ முன்னிறுத்தியே குறித்த முஸ்லிம் அரசியல்வாதி கைது செய்யப்படவுள்ளார்.
எனினும் இதுவரை அவரைக் கைது செய்வதற்குப் போதுமான ஆதாரங்களை திரட்டிக் கொள்ள முடியாமல் இருப்பதாக புலனாய்வுத்துறை வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

வீழ்ந்து வெடித்தால் காதுகளிலும் கண்களிலும் இரத்தம் வடியும்;! ஈரானை அச்சப்படுத்தும் அமெரிக்காவின் அதிசயக் குண்டு!!

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
