மனித உரிமைகள் தொடர்பில் ரணிலிடம் கடும் கண்டனத்தை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், தமது, கடும் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து, சவாலான காலங்களில் இலங்கையின் பங்காளியாக இருக்கும் என்று உறுதியளித்தனர்.
எனினும் குடியியல், மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வலியுறுத்தியுள்ளனர்.
கடும் கண்டனம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகை, சர்வதேச நாணய நிதியம், மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகிய 3 முக்கிய செயல்முறைகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே இலங்கையின் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam