ஐரோப்பிய ஒன்றியம் - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தகப் போரைத் தவிர்க்கும் நோக்கில், அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீதான வரிகளைத் தளர்த்துவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் இன்றையதினம்(16.6.2026) ஒப்புதல் அளித்துள்ளது.
உலக அளவில் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளாக விளங்கும் இவ்விரு தரப்புக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்காட்லாந்தில் உள்ள டர்ன்பெர்ரி கோல்ஃப் மைதானத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இந்த வர்த்தக உடன்பாட்டை எட்டினர்.
சிறப்பு முன்னுரிமை
அதன்படி, அமெரிக்காவின் தொழில் துறை சார்ந்த பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை நீக்கவும், அமெரிக்க விவசாயப் பொருட்களுக்குச் சிறப்பு முன்னுரிமை வழங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டது.

அதற்குப் பதிலாக, ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 15 விழுக்காடு என்ற அளவில் வரி விதிக்க அமெரிக்கா சம்மதித்திருந்தது.
இந்த முதற்கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 11 மாதங்கள் கடந்த நிலையிலும், வரிக் குறைப்புகளைச் செயல்படுத்துவதற்கான சட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் இயற்றாமல் தாமதப்படுத்தி வந்தது.
வர்த்தக மோதல்
இதனால் அதிருப்தியடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வரும் ஜூலை 4ஆம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் "மிகக் கடுமையான" வரிகளை விதிக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்தே, தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றம் அவசரமாகக் கூடி இந்த வரிக் குறைப்பு மசோதாவிற்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த ஒப்புதலின் மூலம் இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் வெடிக்கவிருந்த புதிய வர்த்தக மோதல் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri