பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்

Sri Lanka United Kingdom World
By Aanadhi Jun 16, 2026 07:52 AM GMT
Report

ஐக்கிய ராச்சியத்தில் தொழில் ரீதியாகவும் தன்னார்வ அடிப்படையிலும் பெரிய அளவிலான சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு இலங்கை குடும்பத்தை நாடு கடத்துவதற்கான அந்நாட்டு உள்துறை அமைச்சின் முடிவு, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

பிரித்தானிய மக்கள் பிரதிநிதிகள் சபை (House of Commons) ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பேசிய லிபரல் ஜனநாயகக் கட்சியின் எம்.பி. விக்டோரியா கொலின்ஸ், குறித்த இலங்கை குடும்பம் எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்க பிரித்தானிய அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

என்னை கைது செய்யாதீர்...! அவசர அவசரமாக மனுத் தாக்கல் செய்த கோட்டாபய

என்னை கைது செய்யாதீர்...! அவசர அவசரமாக மனுத் தாக்கல் செய்த கோட்டாபய

புதிய விசா விதிமுறை

உள்ளூர் சமூகத்திற்கு மிகவும் மதிப்புமிக்க சேவையை ஆற்றிவரும் இவர்களை நாடு கடத்துவது முற்றிலும் அநியாயமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு கடத்தலை எதிர்கொள்ளும் அந்தக் குடும்பத்தினர் ரசிக சமரசிங்க, அவரது மனைவி சமிலா தில்ருக்ஷி (45), மற்றும் அவர்களது மூன்று சிறு குழந்தைகள் ஆவர். இவர்கள் அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி கடந்த நான்கு ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் | Sri Lankan Family Be Deported From United Kingdom

ரசிக ஒரு பராமரிப்புப் பணியாளராகவும், சமிலா நோர்த்சர்ச் பகுதியில் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு துணை ஆசிரியராகவும், உள்ளூர் தேவாலயத்தில் ஒரு தன்னார்வலராகவும் பணியாற்றி வருகின்றனர்.

புதிய விசா விதிமுறைகளின் கீழ் சட்டப்பூர்வமாக வசித்து வந்த தாயும் மூன்று குழந்தைகளும், 14 நாட்களுக்குள் இங்கிலாந்தை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சினால் திடீரென உத்தரவிடப்பட்டுள்ளனர்.

தந்தை மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னிலையான யோஷித ராஜபக்ச - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

நீதிமன்றத்தில் முன்னிலையான யோஷித ராஜபக்ச - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மக்கள் அதிர்ச்சி

அதிகாரிகளின் இந்த முடிவு அப்பகுதியில் வசிக்கும் பிரித்தானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், அவர்கள் ஏற்கனவே அந்த இலங்கை குடும்பத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கொலின்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தம்பதியினர் உள்ளூர் மக்களால் முன்களப் பணியாளர்களாகவும், சமூகத்தின் வலுவான தூண்களாகவும் மதிக்கப்படுகிறார்கள்.

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் | Sri Lankan Family Be Deported From United Kingdom

மேலும்,அவர்களின் கருணையும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த சமூகத்தாலும் பாராட்டப்படுகிறது.

குழந்தைகளை அவர்களின் தந்தையரிடமிருந்து பிரிப்பது, அவர்கள் மீது கடுமையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அந்தக் குடும்பம் பிரித்தானிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளது.

வெறும் 133 நாட்கள் மட்டுமே..! உயர்தர பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெறும் 133 நாட்கள் மட்டுமே..! உயர்தர பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகாரப்பூர்வமாக கடிதம்

இந்தப் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கையும் சாதகமான தீர்வையும் கோரி, குடிவரவுத்துறை அமைச்சருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளதாக விக்டோரியா கொலின்ஸ் கூறியுள்ளார்.

இதேபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளும் மற்ற குடும்பங்களுக்கும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் | Sri Lankan Family Be Deported From United Kingdom

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் கரோலின் நோக்ஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் கவலைகளைத் தாம் புரிந்துகொண்டதாகவும், ஆனால் இது சபாநாயகர் அலுவலகத்தின் மூலம் நேரடியாகத் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினை அல்ல என்றும் கூறினார்.

அதன்படி, இந்த இலங்கை குடும்பத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க எடுக்கக்கூடிய மாற்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆராய்வதற்காக, அவை அலுவலகத்துடன் (Table Office) இணைந்து செயல்படுமாறு பிரதி சபாநாயகர் விக்டோரிய கொலின்ஸ் எம்.பி.க்கு அறிவுறுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, ஜேர்மனி, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US