சமூக ஊடகங்களில் அவதூறு பிரசாரம்: அமைச்சர் எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் அவதூறு பிரசாரம் முன்னெடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பௌத்த சாசன மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சுனில் செனவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமக்கு சேறு பூசும் நோக்கில் சமூக ஊடகங்களில் போலியானதும் பொய்யானதுமான தகவல்கள் பகிரப்பட்டு வருவதகாக் குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் ஓருவரினால் இந்த அவதூறு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சரின் ஊடக செயலாளர் குணரட்ன விக்ரமதிலக்க தெரிவித்துள்ளார்.

போலியான தகவலக்ள உருவாக்கி பிரசாரம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் குணரட்ன அனுப்பி வைத்துள்ளார்.
அமைச்சர் பௌத்த சாசனத்திற்கு அவமரியாதை செய்வதாக காண்பிக்க முயற்சிக்கும் வகையிலான போலித் தகவல்கள் பகிரப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் போலியானது என்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் வேண்டுமென்றே போலித் தகவல்களை பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.