1000 கோல் சாதனையை நெருங்கும் ரொனால்டோ! 15 நிமிடங்களில் ஹாட்ரிக்
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 1000 கோல்கள் என்ற வரலாற்றுச் சாதனையை நெருங்கியுள்ளார்.
சவுதி புரோ லீக் தொடரில் அல் நஸ்ர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, அல் கோலூத் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 15 நிமிடங்களில் மூன்று கோல்களைப் பதிவு செய்து அசத்தியுள்ளார்.
வரலாற்று மைல்கல்
வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் அல் நஸ்ர் அணி வெற்றிபெற்றது. போட்டியின் 66, 72 மற்றும் 81ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களைப் பதிவு செய்த ரொனால்டோ, தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் மொத்த கோல் எண்ணிக்கையை 985 ஆக உயர்த்தியுள்ளார்.
Cristiano Ronaldo with amazing finishing. 985 career goals and 15 more to reach 1,000. https://t.co/S7ArdRGski
— Awwal (@CFC_Horllybrain) October 29, 2026
இதன் மூலம் 1000 கோல்கள் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 15 கோல்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. அத்துடன், அல் நஸ்ர் அணிக்காக தனது ஏழாவது ஹாட்ரிக் சாதனையையும், கழக மற்றும் தேசிய அணிகளுக்காக மொத்தமாக 67ஆவது ஹாட்ரிக் சாதனையையும் ரொனால்டோ பதிவு செய்துள்ளார்.
கால்பந்து வரலாற்றில் அதிக கோல்களைப் பதிவு செய்த வீரராகத் திகழும் ரொனால்டோ, 936 கோல்களுடன் இரண்டாவது இடத்திலுள்ள லியோனல் மெஸ்ஸியை விட 49 கோல்கள் அதிகமாகப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ரொனால்டோவின் 1000 கோல்கள் என்ற வரலாற்றுச் சாதனையை கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மோசமடையும் ஷிரந்தியின் உடல்நிலை! பெரும் கவலையில் நாமல் மற்றும் குடும்பத்தினர்: பின்னணியில் தீவிர சட்ட ஆலோசனை
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri