சர்வதேச ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்திய தாக்குதல்கள் - ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி
இன்றைய சூழலில் உலகத்தில் பாரிய அதிர்வலைகளை ரஷ்யா - உக்ரைனுக்கு இடையில் வலுப்பெற்றுவரும் தாக்குதல்கள் ஏற்படுத்தியுள்ளன.
உக்ரைனில் தற்போது முழு வீச்சிலான போரை ரஷ்யா தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பாரிய பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று, ஐரோப்பிய தலைவர்களுக்கு ஒப்புதலுக்காக "பாரிய மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளின் தொகுப்பு" வழங்கப்படும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த தடைகள் மூலம், முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளுக்கான அணுகலைத் தடுத்து ரஷ்யப் பொருளாதாரத்தின் மூலோபாயத் துறைகளை குறிவைக்கப்படும்.
அத்துடன் ரஷ்யாவின் பொருளாதாரத் தளத்தையும் நவீனமயமாக்கும் திறனையும் பலவீனப்படுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ரஷ்யா இதுவரை கண்டிராத கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்..
உக்ரைன் யுத்தம்: என்ன செய்யப் போகிறது நேட்டோ? (Photos)
உக்ரைன் ரஷ்யப் போரின் எதிரொலி! லண்டன் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பாரிய சரிவு
உக்ரைனை சூழ்ந்து கொண்ட போர் மேகங்கள்! அங்கு வாழும் தமிழர்களுக்கான அவசர அறிவிப்பு (Photo)

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
