உக்ரைன் யுத்தம்: என்ன செய்யப் போகிறது நேட்டோ? (Photos)

Russia Ukraine War NATO
By Benat Feb 24, 2022 06:59 AM GMT
Report
Courtesy: BBC Tamil

உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்புக்கு பதில் தரும் வகையில் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நேட்டோ அமைப்பு ஆலோசித்து வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, தமது துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது. சில உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவியை வழங்கியிருக்கின்றன.  

நேட்டோ என்றால் என்ன?

நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும்.  

ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

1955இல் நேட்டோ கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் கூட்டணியுடன் ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தனியாக ராணுவ கூட்டணியை அமைத்தது.  

வார்சா ஒப்பந்தத்தின்படி இணைந்த நேச நாடுகளில் பல 1991இல் சோவித் யூனியன் பிளவுபட்ட பிறகு ஒப்பந்தத்தில் இருந்து விலகி நேட்டோவில் உறுப்பினர்களாயின. இப்போது நேட்டோ அமைப்பில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன.  

நேட்டோ மற்றும் உக்ரைனுடன் ரஷ்யாவுக்கு தற்போதுள்ள பிரச்சினை என்ன? 

 ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் உக்ரைன்.

அந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. ஆனாலும், அது நேட்டோ நேச நாடாக விளங்கி வருகிறது. அப்படியென்றால், எதிர்காலத்தில் எப்போதாவது ஒரு கட்டத்தில் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர உக்ரைன் அனுமதிக்கப்படலாம் என கருதலாம்.

ஆனால், அப்படியொன்று நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் தர வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.  

எனினும், நேட்டோவுடன் உக்ரைன் நட்பு பாராட்டுவதற்கு தடை விதிக்க அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மறுத்து வருகின்றன.

தமது பாதுகாப்பு கூட்டாளிகளை சுயமாக தேர்வு செய்யும் சுதந்திரம் இறையாண்மை மிக்க நாட்டுக்கு இருக்க வேண்டும் என்று அந்தநாடுகள் கூறி வருகின்றன.

மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டணியில் இணையும் தமது இலக்கில் 'வளைந்து கொடுத்துப் போகவே' உக்ரைன் விரும்புவதாக பிரிட்டனுக்கான யுக்ரேனிய தூதர் வாடிம் ப்ரிஸ்டெய்க் சமீபத்தில் கூறினார்.  

ஆனால், அவரது கருத்துடன் முரண்பட்ட யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் செய்தித்தொடர்பாளர், யுக்ரேனிய அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் தமது ஆர்வத்தில் தங்கள் நாடு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

உக்ரைனில் ரஷ்யாவுடன் நெருங்கிய சமூக மற்றும் கலசாார தொடர்புகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய இனவாத ரஷ்ய மக்கள்தொகை உள்ளது.

கேந்திர ரீதியாக இந்த வாய்ப்பை அந்நாட்டுக்குள் நுழையும் பின்வாசல் வழியாகப் பார்க்கிறது. உக்ரைனியர்களும், ரஷ்யர்களும் ஒரே மக்கள் என்று எழுதுகிறார் விளாடிமிர் புதின். 

 உக்ரைன் யுத்தம்: என்ன செய்யப் போகிறது நேட்டோ? (Photos) | Ukraine War What Is Nato Going To Do

ரஷ்யா வேறு எதைப் பற்றி கவலைப்படுகிறது?

மேற்கத்திய சக்திகள் ரஷ்யா மீது அத்துமீறி நுழைவதற்கு நேட்டோ அமைப்பைப் பயன்படுத்துவதாக அதிபர் புதின் கூறுகிறார். மேலும், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ தனது ராணுவ செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்று 1990இல் அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறி விட்டதாக அதிபர் புதின் நீண்ட காலமாக வாதிட்டார்.

ஆனால், ரஷ்யாவின் கூற்றுகளை நிராகரிக்கும் நேட்டோ அமைப்பு, ரஷ்யாவுடனான எல்லையை பகிரும் தமது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை வெகு குறைவு என்றும் அவற்றுடனான தமது கூட்டணி தற்காப்பு அடிப்படையிலானது என்றும் தெரிவித்துள்ளது.  

உக்ரைன் யுத்தம்: என்ன செய்யப் போகிறது நேட்டோ? (Photos) | Ukraine War What Is Nato Going To Do

நேட்டோ கடந்த காலத்தில் என்ன செய்தது?

2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உக்ரைனியர்கள் தங்கள் 'ரஷ்ய ஆதரவு' அதிபரை பதவியில் இருந்து அகற்றியபோது, யுக்ரேனின் தெற்கு கிரைமிய தீபகற்பத்தை தன்னுடன் ரஷ்யா இணைத்துக் கொண்டது. கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய தமது ஆதரவு பிரிவினைவாதிகளையும் ரஷ்யா ஆதரித்தது.

அந்த விவகாரத்தில் நேட்டோ தலையிடவில்லை. ஆனால் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோ அதன் படைகளை முதல் முறையாக நிலைநிறுத்தி எதிர்வினையாற்றியது. இந்த படைகள் நேட்டோவின் பிராந்தியத்தை ரஷ்யா ஆக்கிரமிக்க முனைந்தால், அந்த நிலைமையை செயலிழக்கச் செய்யும் வகையில் இந்த நேசப் படைகளின் தன்மை வடிவமைக்கப்பட்டுள்ளன.  

பன்னாட்டு போர்த்தளவாட துருப்புகள் அடங்கிய நான்கு படையணிகளை எஸ்டோனியா, லாத்வியா, லிதுவேனியா, போலாந்து ஆகியவற்றில் நேட்டோ கொண்டிருக்கிறது.

உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய போர் விமானம் ஊடுருவினால் அதை தடுக்கும் வகையில் வான் கண்காணிப்பையும் பால்டிக் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ விரிவுபடுத்தியுள்ளது.

இந்த படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.  

உக்ரைனுக்கு நேட்டோ அளித்த வாக்குறுதிகள் என்ன?

நேட்டோவின் கிழக்கு எல்லைகளை வலுப்படுத்த அமெரிக்கா கிட்டத்தட்ட 3,000 கூடுதல் துருப்புக்களை போலந்து மற்றும் ருமேனியாவுக்கு அனுப்பியுள்ளது. மேலும் போரை எதிர்கொள்ளும் 8,500 துருப்புக்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. எனினும், உக்ரைனுக்குள் அவற்றை அனுப்பும் திட்டத்தை இன்னும் நேட்டோ கொண்டிருக்கவில்லை.

இதேவேளை, உக்ரைனுக்கு ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட 200 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை நேட்டோ அனுப்பியுள்ளது.

இது தவிர, அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு பிற நேட்டோ நாடுகள் அனுப்பவும் அனுமதித்துள்ளது. உக்ரைனுக்கு குறுகிய தூர இலக்கை தாக்கும் திறன் கொண்ட 2,000 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பிரிட்டன் வழங்கியுள்ளது. மேலும் போலந்திற்கு கூடுதலாக 350 துருப்புக்களையும், எஸ்டோனியாவுக்கு 900 கூடுதல் துருப்புக்களை அனுப்பி தமது பலத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது பிரிட்டன்.  

இது தவிர, தெற்கு ஐரோப்பாவுக்கு பிரிட்டன் விமானப்படையின் மேலதிக போர் விமானங்களையும் கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள நேட்டோ போர்க்கப்பல்களுக்கு உதவியாக கடற்படை கண்காணிப்பு கப்பல்களையும் பிரிட்டன் அனுப்பியிருக்கிறது.

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டால், 1,000 துருப்புக்களை ஆயத்த நிலையில் இருக்குமாறும் பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.

டென்மார்க், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தும், கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன.

ருமேனியாவில் நேட்டோ போர்க் குழுவை வழிநடத்த அங்கு தமது படைகளை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதன் விவரங்களை விரிவாக பட்டியலிட இன்னும் பல வாரங்கள் ஆகும் என்று நேட்டோ கூறியிருக்கிறது.  

உக்ரைன் யுத்தம்: என்ன செய்யப் போகிறது நேட்டோ? (Photos) | Ukraine War What Is Nato Going To Do

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, மன்னார், Toronto, Canada

22 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, London, United Kingdom

18 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, கிளிநொச்சி, கொழும்பு

21 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மாப்பாணவூரி, சுதுமலை

23 Apr, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US