ரஸ்யாவுக்கு எதிராக திரளும் அண்டைநாடுகள்! ஐரோப்பாவும் இணைகிறது! நியாயம் கூறும் ரஸ்யா! (Live Update)
உக்ரேனிய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 5 பேர் உயிரிழப்பு
உக்ரைன் ஆயுதப்படையின் ராணுவ விமானம், தலைநகர் கீஃப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகினர். அந்த விமானத்தில் மொத்தம் 14 பேர் இருந்தனர். |
உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் ஐரோப்பிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அவர். பிரான்ஸ் உக்ரைனின் பக்கம் நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார் இந்தநிலையில் ரஸ்யாவின் நடவடிக்கைகள் கண்டத்திற்கு "நீடித்த மற்றும் ஆழமான" விளைவுகளை ஏற்படுத்தும் என்று மெக்ரோன் எச்சரித்துள்ளார் உக்ரெய்ன் மீதான இராணுவ படையெடுப்பின் தன்மை மற்றும் அதற்கான நியாயங்கள் குறித்து ரஸ்ய படைத்தரப்பு பல்வேறு கூற்றுக்களை வெளியிட்டுள்ளது. உக்ரேனிய இராணுவத்தால் தாக்கப்படுவதாக ரஸ்யாவிடம் கூறிய டான்பாஸின் ரஸ்ய ஆதரவுடைய பிரிவினைவாதப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகவே உக்ரைன் மீது அதன் தாக்குதல் ஆரம்;பிக்கப்பட்டதாக ரஸ்ய படைத்தரப்பு குறிப்பிட்டுள்ளது. தமது தாக்குதல்கள் "அதிக துல்லியமானவை" என்றும் இராணுவ உள்கட்டமைப்பை மட்டுமே குறிவைப்பதாகவும் அது கூறியுள்ளது ரஸ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையிலேயே ரஸ்யாவின் இந்த கூற்று வெளியாகியுள்ளது அத்துடன் உக்ரேய்னின் பெரிய விமான நிலையம் மீதும் ரஸ்ய ஏவுகணை தாக்தல் நடத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான காணொளி இது! லிதுவேனியாவின் ஜனாதிபதி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. ரஸ்யாவிலும் பெலாரஸிலும் குவிந்திருக்கும் பெரிய இராணுவப் படைகளால் ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் ஆத்திரமூட்டல்களுக்கு" பதிலடியாக, தனது எல்லைகளைக் காக்க இராணுவத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கிடானாஸ் நௌசேடா கூறுகிறார். இதற்கிடையில், ரஸ்யாவின் எல்லையில் இருக்கும் எஸ்டோனியாவின் பிரதமர் காஜா கல்லாஸ், உக்ரைனுக்கு தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் உதவப்போவதாக கூறியுள்ளார் அரசியல் மற்றும் ஆயுதங்களை அனுப்புதல் போன்ற வழிகளில் தாம் இதனை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த ஆக்கிரமிப்பு விரிவடையாமலிருக்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ மட்டத்தில் நாம் அனைத்தையும் செய்ய வேண்டும்." என்றும் அவர் கேட்டுக்கொண்டார் உக்ரெய்ன் தொடர்பாக தாம் கொண்டிருந்த மோசமான அச்சம் உண்மையாகிவிட்டது என்று இங்கிலாந்தின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார் ரஸ்யா, உக்ரெய்ன் மீது நடத்தும் தாக்குதல்கள் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் ரஸ்யாவின்; ஜனாதிபதி புடின் ஐரோப்பாவில் போரை கட்டவிழ்த்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புடின் உக்ரைனுக்கு "வன்முறை அலையை" கொண்டு வந்துள்ளாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் சர்வாதிகாரி உக்ரேனியர்களின் தேசிய உணர்வை அடக்குவார் என்று தாம் நம்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுக்கு உதவ ஐரோப்பாவில் தற்காப்பு ஆயுதங்களை அனுப்பிய முதல் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று என்று குறிப்பிட்ட பொரிஸ் ஜோன்சன், ரஸ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை கொண்டு வரப்படும் என்று எச்சரித்துள்ளார். ரஸ்யாவின் இந்த தாக்குதல் தோல்வியிலேயே முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் ரஸ்யாவின் தாக்குதல்கள் காரணமாக மத்திய கெய்வில் உள்ள உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைமையகத்தில் கறுப்பு புகை எழுவதை புகைப்படங்களில் காணமுடிகிறது. ரஸ்ய ஏவுகணைத் தாக்குதல்களால் தமது இராணுவ கட்டளை மையங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது உக்ரைன் மீதான ரஸ்யாவின் பயங்கரமான தாக்குதலை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள நேட்டோ அமைப்பு, ரஸ்யாவின் இந்த தாக்குதல்களை "செயல்படுத்தியதற்காக" பெலாரஸைக் கண்டித்துள்ளது. இந்த தாக்குதல், ஐக்கிய நாடுகள் சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறுவதாகும்" என்று நேட்டோ கூறியுள்ளது இந்தநிலையில் அனைத்து நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நேட்டோ தொடர்ந்து எடுக்குமென்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பெலாரஸ் படைகள் தற்போது இடம்பெறும் ரஸ்ய படையெடுப்பில் பங்கேற்கவில்லை - ஆனால் தேவைப்பட்டால் அதில் பங்கேற்கும் என்று பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாசென்கோ தெரிவித்;துள்ளார்
பெலாரஸிலிருந்தே ரஸ்யாவின் கனரக வாகனங்கள் உக்ரேய்னுக்குள் நுழைந்ததாக என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உக்ரேனின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல்கள் இடம்பெறுகின்றன அனைத்து திசைகளிலிருந்தும் ரஸ்ய கனரக வாகனங்கள் உக்ரெய்னுக்குள் நுழைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் கிவ்விலும், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள கிராமடோர்ஸ்கிலும் பலத்த சத்தம் கேட்பதாக சர்வதேச செய்தியாளர்கள் கூறுகின்றனர் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவிலும் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரெய்ன் மீது ரஸ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 40 படையினரும் 10 பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவி;த்துள்ளன இந்த தாக்குதல்களின்போது பலர் காயமடைந்துள்ளனர அதேநேரம் தாம் ரஸ்யாவின் 50 படையினரை கொன்றதுடன் 7 விமானங்களை தாக்கியழித்ததாக உக்ரெய்ன் இராணுவம் அறிவித்துள்ளது. ரஸ்யப் படைகள் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களுக்கு அருகே ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. தாக்குதல்கள் தொடர்பில் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. எனினும் அவை உறுதிபடுத்தப்படவில்லை. உக்ரைன் பிரதேசத்தின் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஸ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை உக்ரைன் உத்தியோகபூர்வமாக துண்டித்துள்ளது. ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை யுக்ரெய்னின் கிழக்கு பகுதிகளில் இருந்து பிரிவினைவாதிகளின் பகுதிகளுடன் ராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளப்போவதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். |
உக்ரைனின் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளனரஸ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் காவல்துறையை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனியர்கள் நாட்டின் பிராந்திய பாதுகாப்புப் பிரிவுகளில் சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்ற செய்திகளுக்கு மத்தியில் இந்த ஆயத விநியோக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் விமானப் போக்குவரத்து சேவைகள், தாக்குதலுக்கு
உள்ளானதால், அந்த நாடு தமது வான்வெளியை மூடியுள்ளது
இதனையடுத்து பொது விமான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன |
உக்ரைன் மீது ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு! இதுவரை நடந்தவைரஸ்யாவின் மொஸ்கோ நேரப்படி மாலை 5:55 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் "இராணுவ நடவடிக்கையை" அறிவித்தார். ரஸ்யா, தற்காப்புக்காகச் செயல்படுவதாக கூறிய அவர் உக்ரேனிய வீரர்களை ஆயுதங்களைக் கீழே போடுமாறு வலியுறுத்தினார். ரஸ்யாவிற்கு எதிராக வெளி சக்திகளின் எந்தவொரு தலையீட்டுக்கும் எதிராக உடனடி பதில் வழங்கப்படும் என்றும் அவர் தமது உரையில் எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து உக்ரைன் உள்கட்டமைப்பை ரஸ்யா ஏவுகணைகள் மூலம் தாக்கிதாக உக்ரைன் கூறுகிறது. ரஸ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அது கூறியது எனினும் மொஸ்கோ அதனை மறுத்துள்ளது. ரஸ்யாவின் துருப்புக்கள் மற்றும் தாங்;கிகளின் தொகுதிகள்; எல்லா திசைகளிலிருந்தும் உக்ரைனுக்குள் நுழைந்தன. தலைநகர் கீவின் வடக்கே பெலாரஸிலிருந்து ஒரு இராணுவ தொடரணியும் சென்றது தாக்குதல் சம்பவங்களின்போது குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது தலைநகர் கிவ்வை விட்டு மக்கள் வெளியேற முயற்சிப்பதால் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மற்ற குடியிருப்பாளர்கள் மெட்ரோ தொடருந்து நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மக்கள் தாக்குதலை எதிர்பார்த்திருந்தாலும், படையெடுப்பின் அளவு தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து உக்ரைன் இராணுவச் சட்டத்தை அறிவித்தது. சர்வதேச ஸ்விஃப்ட் வங்கி பரிமாற்ற அமைப்பிலிருந்து ரஸ்யாவை தடை செய்வது உட்பட பொருளாதாரத் தடைகளை உக்ரெய்னின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா சர்வதேசத்திடம் வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில் ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக எண்ணெய் விலை பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ருஸ்ய நாணயமான ரூபிள், டொலர் மற்றும் யூரோவிற்கு எதிராக எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. இங்கிலாந்து பங்கு சந்தை சரிவு கண்டது. இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் உட்பட்ட உலக தலைவர்கள் ரஸ்யாவின் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, அமெரிக்கா என்பன பாரிய பொருளாதார தடைகளை ரஸ்யாவுக்கு எதிராக விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளன. |
ரஸ்யாவின் ஏவுகணை தாக்குதல்! பல வெடிப்புக்கள் பதிவுஉக்ரைனின் கீவ் மற்றும் கார்கில் உட்பட பல பகுதிகளில் ரஸ்யாவின் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. உக்ரைனை ஆக்கிரமிக்கத் திட்டமிடவில்லை என்றும், உக்ரைன் இராணுவம் தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்றும் இன்று அதிகாலை அறிவித்திருந்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இந்தநிலையில் ரஸ்யா முழு அளவிலான படையெடுப்பை நடத்தியுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. ரஸ்ய இராணுவத் தொடரணி ஒன்று தெற்கு உக்ரைனுக்குள் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரின் கிழக்கில் இருந்தும் ரஸ்யாவிலிருந்தும் வடக்கில் இருந்தும்
இராணுவத் தொடரணிகள் உக்ரைய்னுக்குள் பிரவேசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ரஸ்ய தாக்குதலில் பொதுமக்கள் பலி!ரஸ்ய படைகள் நடத்திய குண்டு தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். |
ஒடெசாவிற்கு வெளியே போடில்ஸ்கில் உள்ள ஒரு இராணுவப் பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன்போது 19 பேரையும் காணவில்லை. மரியுபோல் நகரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உகரேய்ன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இந்தநிலையில் ரஸ்யாவின் இராணுவ கான்வாய்கள் எல்லையை கடப்பதாக உக்ரைனின் எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. வடக்கு செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகளிலும், கிழக்கு லுஹான்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளிலும் ரஸ்ய இராணுவ வாகனங்கள் உக்ரைனுக்குள் நுழைந்ததாக உக்ரைனின் எல்லைக் காவல் சேவை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அது கூறுகிறது. இதன் காரணமாக உக்ரேனிய எல்லைப்படையினர் பலர் காயமடைந்துள்ளனர் இந்தநிலையில் உக்ரைனின் எல்லை படையினரும்; ஆயுதப் படையினரும்"எதிரிகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன" என்று உக்ரைனின் எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை ரஸ்யாவின் வான்வழித் தாக்குதலை எதிர்த்து தனது விமானப்படை போராடி வருவதாக உக்ரைன் இராணுவத்தின் அறிக்கைக்கு ரஸ்ய படையினர் பதில் வழங்கியுள்ளனர் அதில் "உக்ரேனிய ஆயுதப்படைகளின் வான் பாதுகாப்பு ஒடுக்கப்பட்டது" என்று அவர்கள் கூறியுள்ளனர். |
உக்ரேனிய எல்லைப் படைகள்,ரஸ்ய படைகளுக்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை" என்று ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும் ரஸ்யாவின் இந்த உரிமைகோரல்களுக்கு சுயாதீன உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்று பி பி சி கூறுகிறது. |
தமிழ் வின்னுடன் நீங்கள் தற்போதுதான்; இணைந்திருந்தால் - இதுவரை வழங்கப்பட்ட செய்திகளின் துளிகள்- - உக்ரைனில் ரஸ்யாவின் செயற்பாடுகள் குறித்து சில வாரங்களாக செய்திகள் வெளயாகி வந்தன - இந்தநிலையில் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டான்பாஸில் "சிறப்பு இராணுவ நடவடிக்கை" ஒன்றுக்கு இன்று அழைப்பு விடுத்தார். - இதனையடுத்து உக்ரைனின் பல பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். - அத்துடன் இந்த தாக்குதலுக்கு ரஸ்யாவை பொறுப்புக்கூற வைக்கப்போவதாக உறுதியளித்துள்ளார். -இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நேட்டோ தலைவர்களும் ரஸ்ய தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளனர். |
இப்போது சென்று முழுமைச் செய்திகளையும் பாருங்கள் ---
ரஸ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
ரஸ்யாவின் ஐந்து விமானங்களையும் ஒரு உலங்கு வானூர்தியையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் கூறுகின்றன.
"அமைதியாக இருங்கள் மற்றும் உக்ரைன் படையினரை நம்புங்கள்" என்று உக்ரைன் படைகளின் அறிக்கை பொதுமக்களை கேட்டுள்ளது.
எனினும் ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை மறுத்துள்ளது.
பொதுமக்கள் வெளியேற்றம்
உக்ரெய்ன் தலைநகரில் இருந்து வெளியேறும் பொதுமக்கள்
ரஸ்யாவின் தாக்குல்களை அடுத்து கெய்வ் தலைநகரில், அவசரகால ஒலி ஒலிக்கப்பட்டது,
மேலும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிலர் தாங்கள் பதுங்கிடங்களுக்கு விரைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தெருக்களில் குழுமியிருந்து பிரார்த்தனை செய்வதை தொலைக்காட்சிகள் காண்பித்துக்கொண்டிருகின்றன
சர்வதேசத்திடம் உக்ரேய்னின் கோரிக்கை
ரஸ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டிய பட்டியல்" ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.
"உலகம் உடனடியாக செயல்பட வேண்டும்" அத்துடன் "ஐரோப்பாவின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
ஸ்விஃப்ட(SWIFT)நிதி பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துவதில் இருந்து ரஸ்யாவை தடை செய்வது உட்பட, அந்த நாட்டின்; மீது உடனடி தடைகளுக்கு" குலேபா அழைப்பு விடுத்துள்ளார்.
ஆறாம் இணைப்பு
உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் அதே வேளையில், உலகம் ரஸ்;யாவை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும்" என்றும் அவர் கோரியுள்ளார்
இதேவேளை ரஸ்யாவின் வான் தாக்குதலை தமது படையினர் முறியடித்து வருவதாக உக்ரெய்ன் ஆயுதப்படைகள் அறிவித்துள்ளன.
நாட்டின் கிழக்கில் உள்ள அதன் பிரிவுகள் மீது ரஸ்யா தீவிர எறிகனைத் தாக்குதல்களை" நடத்தியதாக உக்ரேனிய ஆயுதப்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது
கியேவ் அருகே உள்ள விமான நிலையம் மற்றும் பல விமான நிலையங்கள் மீதும் ரஸ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ரஸ்யாவின் வான்வழித் தாக்குதலை முறியடித்து உக்ரைன் வான் படை தாக்குதல் நடத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஸ்ய பரா துருப்புக்கள் இறங்கியதாக வெளியான செய்திகளை உக்ரெய்ன் அறிக்கை மறுத்துள்ளது.
ஐந்தாம் இணைப்பு
அமெரிக்காவின் பிந்திய நிலைப்பாடு
தாம் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் கலந்துரையாடியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ரஸ்யாவின் நடவடிக்கைகக்கு எதிராக "சர்வதேச கண்டனங்களைத் திரட்டுவதற்கு" தாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்ததாக பைடன் தெரிவித்துள்ளார்.
இதன்போது புட்டினின் அப்பட்டமான ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், உக்ரைன் மக்களுடன் நிற்கவும் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு தம்மை உ க்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டதாக பைடன் குறிப்பிட்டுள்ளார்
இன்று ஜி7 நாடுகளின் தலைவர்களை தாம் சந்திக்கவுள்ளதாகவும் ரஸ்யாவின் மீது கடுமையான தடைகளை விதிக்கப்போவதாகவும் பைடன் அறிவித்துள்ளார்.
கள நிலவரம்
ரஸ்ய எல்லையில் இருந்து சுமார் 25 மைல் தொலைவில் உள்ள கார்கிவ் என்ற இடத்தில் ரஸ்ய துருப்புக்கள் எல்லையை கடந்து வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
ரஸ்யாவின் சில ஏவுகணைகள், உக்ரைனின் இராணுவ ஏவுகணை கட்டளை மையங்கள் மற்றும் கியேவில் உள்ள இராணுவ தலைமையகத்தை தாக்கியதாக உக்ரைனின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர்
யுக்ரைனில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதன் மூலம், ஜனாதிபதி விளாடிமிர் புடின், இரத்தக்களரி மற்றும் அழிவின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று இங்கிலாந்தின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து விவாதிக்க யுக்ரைன் ஜனாதிபதியுடன் பேசியதாகவும், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகளின் தீர்க்கமான நடவடிக்கைக்கு அவருக்கு உறுதியளித்துள்ளதாகவும் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
I am appalled by the horrific events in Ukraine and I have spoken to President Zelenskyy to discuss next steps.
— Boris Johnson (@BorisJohnson) February 24, 2022
President Putin has chosen a path of bloodshed and destruction by launching this unprovoked attack on Ukraine.
The UK and our allies will respond decisively.
ரஸ்ய மறுப்பு
யுக்ரேனிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படுவதை ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது –
தமது படையினர், யுக்ரெய்னின் இராணுவ உள்கட்டமைப்பு, வான் பாதுகாப்பு மற்றும் வான படையின் உயர் துல்லிய ஆயுதங்களையே குறிவைப்பதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
நான்காம் இணைப்பு
யுக்ரைன் ஜனாதிபதி நாட்டில் இராணுவச் சட்டத்திற்கு அமுல் செய்துள்ளார்
நாட்டில் இராணுவச் சட்டத்தை அறிவிக்குமாறு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சபைக்கு பணித்துள்ளார்
இந்தநிலையில் பிரச்சி;னை குறித்து முடிவெடுக்க, சபை அவசர கூட்டத்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுக்ரெய்ன் மீது ரஸ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ரொய்ட்டர்ஸ் செய்தியின்படி, யுக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நாட்டில் ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளார்.
யுக்ரைனின் உள்கட்டமைப்பு மற்றும் எல்லைப்படையினர் மீது ரஸ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
மூன்றாம் இணைப்பு
உக்ரைன் மீது தாக்குதல் என்பது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று நேட்டோ பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் பொறுப்பற்ற தாக்குதலுக்கு நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது "எண்ணற்ற பொதுமக்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ரஸ்யாவின் “ஆக்கிரமிப்புக்கு" தீர்வு காண நேட்டோ நட்பு நாடுகள் சந்திக்கவுள்ளதாக என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவின் இந்த படையெடுப்பு, அமெரிக்காவின் பலவீனத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதன் "பலவீனத்தால்" ரஷ்யாவின் இந்த
படையெடுப்பு ஓரளவு தூண்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இரண்டாம் இணைப்பு
உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் இல்லை என்று ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் இராணுவ நடவடிக்கை மூலம், யுக்ரேனிய மக்கள் நாட்டை நடத்துபவர்களை "சுதந்திரமாக தேர்ந்தெடுக்க" முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரஸ்யாவின் "படையெடுப்பு தொடங்கிவிட்டது." என்று அறிவித்துள்ளார்.
தமது நாடு, தம்மை பாதுகாத்துக்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
Putin has just launched a full-scale invasion of Ukraine. Peaceful Ukrainian cities are under strikes. This is a war of aggression. Ukraine will defend itself and will win. The world can and must stop Putin. The time to act is now.
— Dmytro Kuleba (@DmytroKuleba) February 24, 2022
அமெரிக்காவின் நிலைப்பாடு
ரஸ்யாவின் இராணுவப் படைகளின் உக்ரைன் மீதான தாக்குதல், நியாயமற்ற தாக்குதல்" என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
"உலகின் பிரார்த்தனைகள் உக்ரைன் மக்களுடன் உள்ளன" என்று அவர் கூறியுள்ளார். ரஸ்ய ஜனாதிபதி புடின் ஒரு திட்டமிடப்பட்ட போரைத் தேர்ந்தெடுத்துள்ளார், அது பேரழிவுகரமான உயிர் இழப்பு மற்றும் மனித துன்பங்களைக் கொண்டுவரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த தாக்குதல் கொண்டு வரும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஸ்யா மட்டுமே பொறுப்பாகும், இந்தநிலையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்டு தீர்க்கமான முறையில் செயற்படவுள்ளதாக பைடன் குறிப்பிட்டுள்ளார்;
முதலாம் இணைப்பு
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கு உக்ரைனில் உள்ள போர் மண்டலத்தில் உள்ள யுக்ரேனிய வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்புமாறு புடின் வலியுறுத்தியுள்ளார்
இதனையடுத்து ரஸ்யாவின் படையெடுப்பு "ஐரோப்பிய கண்டத்தில் ஒரு பெரிய போரின் ஆரம்பமாக இருக்கலாம்" என்று உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்;.
நாட்டு மக்களுக்கு நள்ளிரவு வேளையில் உரையாற்றிய அவர், ரஸ்யா தாக்குதல் நடத்தினால், "நாங்கள் நம்மை தற்காத்துக்கொள்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகள், யுக்ரேனியப் படைகளின் ஆக்கிரமிப்பை தடுக்க ரஸ்யாவிடம் உதவி கேட்டுள்ளதாக கிரெம்ளின் கூறியிருந்தது.
இதனையடுத்து இந்தக் கோரிக்கை ரஸ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்கான சாக்குப்போக்காக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்;திருந்தனர்
அதேநேரம் ஒரு பெரிய அளவிலான படையெடுப்பிற்கு ரஸ்யா, இப்போது இராணுவ ரீதியாக முழுமையாக தயாராகிவிட்டதாக மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் தெரிவித்திருந்தார்
இந்தநிலையில் யுக்ரெய்ன் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் ரஸ்ய ஜனாதிபதி புடினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
பிந்திக்கிடைத்த தகவல்களின்படி, உக்ரெய்ன் தலைநகர் கீவ் பகுதியில் 5 அல்லது 6 பாரிய வெடிப்பு சத்தங்களை கேட்க முடிந்ததாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்
Live on @CNN air- Matthew Chance hears loud explosions in the Capital City of Kyiv. Unclear where they came from- but they happened just minutes after Putin effectively declared war on Ukraine. Moments later Chance put a flack jacket on live on the air. pic.twitter.com/EQgsKPzlJQ
— Ryan Nobles (@ryanobles) February 24, 2022