நாமல் அவசரமாக வெளிநாடு சென்றது ஏன்..! வெளியான தகவல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமீபத்தில் மாலைத்தீவுக்குச் சென்றதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அவரைக் கைது செய்ய ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த போதிலும், திருமண நிகழ்வில் கலந்து கொள்ள நாமல் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தார்.
மாலைத்தீவின் முன்னாள் துணைத் ஜனாதிபதி அப்துல்லா ஜிஹாத்தின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவே நாமல் சென்றதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி - நாமல் சந்திப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அதே விமானத்தில் மாலைத்தீவுக்குச் சென்றார்.
அவர்கள் ஒரே வணிக வகுப்பில் அமர்ந்திருந்ததாக தெரியவந்துள்ளது. விமான பயணம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது, இதன் போது ஜனாதிபதியும் நாமலும் குறுகிய நட்பு உரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மனு தாக்கல்
மறுநாள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ காலை 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பினார்.
விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போது அது நடக்கவில்லை.
நாட்டிற்கு திரும்பிய நாமல், விமான நிலையத்திலிருந்து நேராக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று மனுவை தாக்கல் செய்து பிணை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




