எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்குவதா இல்லை என்பது குறித்த விடயங்களை ஆராய இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், அதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்துள்ளனர்.
இங்கு கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
ஜீ.எஸ்.பி. பிளஸ், எமது நாட்டுக்கு பாரிய சக்தி எனவும் அதனை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்க தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார் என எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் கூறியுள்ளது.
கோவிட் தொற்று நோய் மற்றும் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இரண்டு தரப்பினரும், விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை முன்நோக்கி செல்வதற்காக தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாளர் ஹர்ச டி சில்வா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர் என எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
இலங்கைக்கு வழங்கும் நிவாரணங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள தகவல்
GSP+ சலுகையை இழக்கும் இலங்கை! வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கம்
கூட்டமைப்பினரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய குழு
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri