நாட்டில் மண்சரிவு அபாயம் அதிகரிப்பு - 7 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை
தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு மத்தியில் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர்பான அறிவிப்பு நேற்று(27.09.2026) தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று கட்டங்களாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இதற்கமைய, காலி மாவட்டத்தின் நியகம, தவலம, நெலுவ மற்றும் நாகொட பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் தெரணியகல, யட்டியந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் (DS) வசிப்பவர்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காலி மாவட்டத்தில், எல்பிட்டிய, கரந்தெனிய மற்றும் பத்தேகம ஆகிய பிரதேசங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட பகுதியிலும் முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம்
கண்டி மாவட்டத்தில், மெடதும்பர, கங்காவட கோரளை, டோலுவ, உடபலாத, யட்டிநுவர மற்றும் பஸ்பாகே கோரளை ஆகிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை, கலிகமுவ, வரகாபொல, ருவன்வெல்ல மற்றும் புலத்கொஹுபிட்டிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தர, பஸ்கொட மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேசங்கள் எச்சரிக்கையின் கீழ் உள்ள அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை வடக்கு, அம்பகமுவ, நுவரெலியா வடக்கு மற்றும் கொத்மலை தெற்கு ஆகிய பிரதேசங்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில், இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கும் சேர்த்து மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆடம்பரங்கள் தேவையில்லை என ஆட்சி பீடம் ஏறியவர்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு எதற்கு..! ஹர்ஷண ராஜகருணா கேள்வி