GSP+ சலுகையை இழக்கும் இலங்கை! வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாங்கம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் வரி அடுத்து வருடம் நீக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வுகூறியுள்ளது.
மிக மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு பதிலாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்து அதனை பயன்படுத்தி வருவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் (MA Sumanthiran) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராயும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழு இன்று மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை, அதன் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
கூட்டமைப்பினரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய குழு