இஸ்ரேலுக்கு ஈரான் கொடுத்த அதிர்ச்சி: தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம்
இஸ்ரேலின் (Israel) மீதான ஈரானின் (Iran) எதிர்பாராத தாக்குதலையடுத்து, ஈரானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகள் தயாரிப்பாளர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் (European Union) தீர்மானித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து, கூட்டப்பட்ட ஒன்றியத்தின் முதலாவது அமர்விலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஈரானை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கல் கூறியுள்ளார்.
தெஹ்ரான் விளக்கம்
அதேவேளை, உக்ரைன் - ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அந்நாட்டிற்கு ஆளில்லாத விமானங்களை விற்பனை செய்ததற்காக ஐரோப்பிய ஒன்றியம், ஈரான் மீது பல்வேறு தடைகளை ஏற்கனவே விதித்திருந்தது.
சிரியாவில் உள்ள தனது தூதரகத்தின் மீது ஏப்ரல் 1ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி அளிக்கும் வகையிலேயே ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியதாக தெஹ்ரான் கூறியுள்ளது.
ஆனால், மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதலைத் தடுக்கும் முயற்சியில், உலகத் தலைவர்கள் தொடர்ந்து நிதானத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |