நெருப்பின் நடுவில் நாங்கள் இருக்கிறோம் : ஜோர்டான் பகிரங்கம்
ஈரானிய தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலளித்தால் அதன் விளைவு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
அவ்வாறு நடந்தால் இது ஒரு பிராந்திய போராக மாறுவதற்கு சாத்தியம் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானிய படைகள் செயல்படும் இரு நாடுகளான சிரியா மற்றும் ஈராக், ஜோர்தானுக்கு அருகில் இருப்பதால் எங்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும்.
"நாங்கள் நெருப்பின் நடுவில் இருக்கிறோம், எனவே எங்கள் சொந்தத்தைப் பாதுகாக்கவும், இந்த அதிகரிப்பைத் தடுக்கவும் நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வோம். என்பதை இரு தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இடைமறிக்கப்பட்ட விமானங்கள்
"ஜோர்டான் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு எறிகணைகளையும் நாங்கள் அகற்றுவோம். எனவும் இதை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் தெளிவுபடுத்தினோம்," என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈராக்கின் திசையில் இருந்து வந்து தெற்கு ஜோர்டான் மீது பறந்த ஈரானிய ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஈரானுடனான மோதலை காசாவிலிருந்து திசைதிருப்ப பயன்படுத்துகிறார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
