இலங்கையில் திறக்கப்படவுள்ள ரஷ்ய எரிபொருள் விற்பனை நிலையங்கள் - அரசு அனுமதி
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் எரிபொருள் தேவையை உறுதி செய்ய ரஷ்யாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக, இரண்டு ரஷ்ய நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களைத் திறக்க முறையான பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று(18.07.2026) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய எரிபொருள் நிலையங்கள்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையைத் தொடர்ந்து உலகளவில் எரிபொருள் நெருக்கடி ஒன்று உருவாகத் தொடங்கியுள்ளதுடன், இது சுற்றுலாத்துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாம் மேற்கொண்ட பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடிந்துள்ளது.

கடந்த காலங்களில் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாத போதும், இலங்கையில் நிலவிய அந்நியச் செலவாணி பற்றாக்குறை காரணமாகவே எரிபொருளைச் சீராகப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போது, உலக நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையிலும், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ப போதிய அந்நியச் செலவாணி கையிருப்பை தற்போதைய அரசு பேணி வருகிறது.
இதன் காரணமாகவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடோ அல்லது நீளமான வரிசைகளோ ஏற்படவில்லை. மத்திய கிழக்கில் தற்காலிகமாக ஏற்பட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ள சூழலை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருக்கிறது.
பொருளாதார நெருக்கடி
அண்மையில் இலங்கை வந்திருந்த ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் மற்றும் ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ஆகியோருடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
அதன் பிரதிபலனாகவே, இரு ரஷ்ய நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் அனைத்தும் நாட்டின் முறையான சட்ட திட்டங்களுக்கு இணங்கவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த இரு ரஷ்ய நிறுவனங்களும் தங்களுக்கான முறையான அனுமதிகளையும் பதிவுகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.
சுற்றுலாத்துறை, எரிபொருள் விநியோகம் என எந்தவொரு துறையாக இருந்தாலும், உலகளாவிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் அரசாங்கம் முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த கால பொருளாதார நெருக்கடியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கை, மீண்டும் அத்தகையதொரு நிலைக்குள் தள்ளப்படக் கூடாது என்பதில் ஜனாதிபதியும் அரச நிர்வாகமும் முழு மூச்சாகச் செயற்பட்டு வருகிறது என உறுதியளித்துள்ளார்.
நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு! நம்பிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri