அமைச்சர் சந்திரசேகரனுடன் எந்த முரண்பாடும் இல்லை - ரஜீவன் எம்.பி விளக்கம்

Kilinochchi Nothern Province Ramalingam Chandrasekar Ramanathan Archchuna
By Kajinthan Jul 19, 2026 11:21 AM GMT
Report

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுக்கும் எனக்கும் இடையிலோ அல்லது எனக்கும் எங்கள் கட்சிக்கும் இடையிலோ எந்த பிரச்சினைகளும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று(18.07.2026) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் என்னால் கூறப்பட்டதாக திரிபுபடுத்தப்பட்டு பரவி வரும் செய்திகள் தொடர்பாக பின்வரும் விளக்கத்தை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் (DCC) கூட்டத்தின் போது அர்ச்சுனா இராமநாதன் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை குறித்து நான் எனது வருத்தத்தை பதிவு செய்திருந்தேன்.

அமைச்சர் சந்திரசேகரனுடன் எந்த முரண்பாடும் இல்லை - ரஜீவன் எம்.பி விளக்கம் | No Problem Between Me And Party Rajeevan Mp States

மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களின் சார்பில் கேள்விகளை முன்வைக்கும் போது, அதற்கான உரிய விளக்கங்களையும் பதில்களையும் அரச அதிகாரிகள் வழங்குவது நல்லாட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைக் கடமையாகும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

எனது முகநூல் பதிவை அடிப்படையாகக் கொண்டு, எனக்கும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகவும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை நான் விமர்சித்ததாகவும் சிலர் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்த வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தியுங்கள்! கூட்டு தமிழ் பேசும் கட்சிகளிடம் கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்த வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தியுங்கள்! கூட்டு தமிழ் பேசும் கட்சிகளிடம் கோரிக்கை

கேள்வி கேட்கும் உரிமை

நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்வாறான கருத்தை வெளிடவில்லை. அதேபோல், அமைச்சருடனோ அல்லது எனது கட்சியுடனோ எந்தவித கருத்து முரண்பாடோ அல்லது அரசியல் பிரச்சினையோ இல்லை என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு போன்ற முக்கியமான கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அரச அதிகாரிகளோ கூட்டத்தை இடைநடுவில் விட்டு வெளியேறுவது நல்ல முன்னுதாரணமாக அமையாது என்பதே எனது கருத்தாகும்.

அமைச்சர் சந்திரசேகரனுடன் எந்த முரண்பாடும் இல்லை - ரஜீவன் எம்.பி விளக்கம் | No Problem Between Me And Party Rajeevan Mp States

குறிப்பாக, வடக்கு மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களின் மூத்த அதிகாரிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த நிலையில், மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல முக்கிய விடயங்கள் மற்றும் அனுமதிகள் அன்றைய தினம் பரிசீலிக்கப்படாமல் போனமை குறித்து நான் கவலை வெளியிட்டிருந்தேன்.

மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கேள்விகள் தொடர்பான விடயங்கள் இயன்றவரை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டால், தேவையான தரவுகளுடன் முழுமையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவதற்கு அது உதவியாக இருக்கும் என்பதையும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இது கேள்வி கேட்கும் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கமல்ல மாறாக, பயனுள்ள நிர்வாக கலந்துரையாடலை உறுதிப்படுத்தும் ஒரு நடைமுறை ஆலோசனையாகும்.

மாகாண அதிகாரங்களை நாங்களாகவே மத்திய அரசுக்குத் தாரைவார்க்கக் கூடாது! சுமந்திரன் அறிவுறுத்து

மாகாண அதிகாரங்களை நாங்களாகவே மத்திய அரசுக்குத் தாரைவார்க்கக் கூடாது! சுமந்திரன் அறிவுறுத்து

மக்கள் நலனும் மாவட்ட அபிவிருத்தியும்

கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், தேவையான இடங்களில் சட்டபூர்வமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள், நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெறுவது மிகவும் அவசியமானது.

அமைச்சர் சந்திரசேகரனுடன் எந்த முரண்பாடும் இல்லை - ரஜீவன் எம்.பி விளக்கம் | No Problem Between Me And Party Rajeevan Mp States

மாவட்ட அபிவிருத்தி பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமெனில், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் பரஸ்பர மரியாதையுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் நலனையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் முன்னிறுத்தி, பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் செயற்படுவது நம் அனைவரின் கடமையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

முடங்கியது முகநூல்..!

முடங்கியது முகநூல்..!

மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US