யேமன் மற்றும் சவூதி அரேபியாவில் தீவிரமடையும் மோதல்கள்
யேமனின் தலைநகரான சனாவில் உள்ள ‘ஏமன் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன்’ பகுதியையும் அதன் எண்ணெய்க் கிடங்குகளையும் இலக்கு வைத்து, சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
தாக்குதலுக்கு முன்னர், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு சவூதி கூட்டணிப் படை எச்சரிக்கை விடுத்திருந்தது.
பதிலடித் தாக்குதல்கள்
முன்னதாக, சனா நகரம் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதற்குப் பதிலாக சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய நகரங்கள் மீது “கடுமையான” மற்றும் வலிமிகுந்த பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஹூதி அமைப்பினர் எச்சரித்திருந்தனர்.

இதனிடையே, யேமனின் தாயிஸ் (Taiz) மாகாணத்தில் ஹூதி அமைப்பினர் நடத்திய எறிகணை மற்றும் ஷெல் தாக்குதல்களில் 5 வயது சிறுவன் உட்பட குறைந்தது 5 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தகவலை தாயிஸ் மாகாண மனித உரிமைகள் அலுவலகத்தை மேற்கோள் காட்டி, யேமன் அரசுக்குச் சொந்தமான ‘யேமன் டிவி’ உறுதிப்படுத்தியுள்ளது.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam