நவநீதம் “நவி” பிள்ளையை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என முத்திரைக்குத்திய ராஜபக்ச தரப்பினர்

United Nations Sri Lankan Tamils Gotabaya Rajapaksa Rajapaksa Family Nobel Prize
By Shadhu Shanker Oct 13, 2026 07:35 PM GMT
Report

2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைச் சட்டத்தரணியும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருமான நவநீதம் “நவி” பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட நவநீதம் பிள்ளைக்கு இந்த உயரிய சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் அவரது கடந்தகால மனித உரிமைப் பணிகள் மற்றும் அப்போதைய ராஜபக்ச அரசாங்கத்துடனான முரண்பாடுகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

நோபல் பரிசு 

2026 ஒக்டோபர் 9ஆம் திகதி நோர்வே நோபல் குழுவினால் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

சர்வதேச சட்டக் கோட்பாடுகளையும் அமைதியையும் மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

நவநீதம் “நவி” பிள்ளையை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என முத்திரைக்குத்திய ராஜபக்ச தரப்பினர் | Nobel Peace Prize To Navanethem Pillay

நவநீதம் பிள்ளை 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றினார்.

அதற்கு முன்னர் ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும் தலைவராகவும் பணியாற்றியதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் நீதிபதியாகச் சேவையாற்றியுள்ளார்.

2013ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அவர், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களையும் சந்தித்திருந்தார்.

ராஜபக்சர்கள் செய்த அவமானம்

அந்த விஜயத்தின்போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை, போருக்குப் பின்னரான இராணுவமயமாக்கல் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்கள் குறித்து அவர் கவலை வெளியிட்டிருந்தார்.

அவரது கருத்துக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் இடையில் அக்காலப்பகுதியில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

நவநீதம் பிள்ளையின் செயற்பாடுகள் தொடர்பில் அப்போதைய அரசாங்கத்தைச் சார்ந்த சில அரசியல்வாதிகள் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.


இவரை ராஜபக்ச தரப்பினர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர் எனக்கூறியதுடன் அவருடைய படங்களை கேலி செய்யும் விதமாகவும் வரைந்து வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், அவரது தமிழ் பூர்வீகத்தை முன்னிறுத்தி முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் இனரீதியான கருத்துக்கள் தொடர்பிலும் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

மனித உரிமைகள், சர்வதேச சட்டம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நவநீதம் பிள்ளையின் நீண்டகாலப் பங்களிப்புகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நோபல் பரிசு அறிவிப்பு இலங்கையின் கடந்தகால மனித உரிமைகள் விவாதங்களையும் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

10 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு வழக்கு! ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக இரு வைத்தியர்களின் வாக்குமூலம்

10 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு வழக்கு! ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக இரு வைத்தியர்களின் வாக்குமூலம்

ரஷ்யாவுக்கு ஆதரவா..! ட்ரம்பின் அதிரடி முடிவால் அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பு

ரஷ்யாவுக்கு ஆதரவா..! ட்ரம்பின் அதிரடி முடிவால் அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பு

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US