ரஷ்யாவுக்கு ஆதரவா..! ட்ரம்பின் அதிரடி முடிவால் அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பு

Donald Trump Vladimir Putin United States of America Russia
By Shadhu Shanker Oct 13, 2026 05:57 PM GMT
Report

இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு டீசல் இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக அனுமதி வழங்கிய தனது கடந்த வார முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே தனது நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இரட்டை நிலைப்பாடு

தனது Truth Social சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியம் கடந்த காலங்களில் எரிசக்திப் பொருட்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டி, அவற்றின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.

“ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எரிசக்திக்காக 250 பில்லியன் டொலர்களைச் செலுத்தியுள்ளது.

ஆனால், போலிச் செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் இந்த விவகாரத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு ஆதரவா..! ட்ரம்பின் அதிரடி முடிவால் அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பு | Made The Right Choice Trump Defends

ட்ரம்ப் இந்தத் தொகை குறித்த விரிவான விளக்கத்தை வழங்கவில்லை என்றாலும், 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர், ரஷ்யாவிலிருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் செலவிட்ட தொகையின் தோராயமான மதிப்பீடாக இது கருதப்படுகிறது.

இதற்கிடையில், ரஷ்ய எரிசக்தி மீதான சார்புநிலையைப் படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவரும் திட்டமொன்றை ஐரோப்பிய ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

 எப்போதும் அமெரிக்காவுக்கே முதலிடம்

தனது எரிசக்திக் கொள்கையை நியாயப்படுத்திய ட்ரம்ப், “அமெரிக்க மக்களுக்காக நான் சரியான முடிவை எடுத்துள்ளேன் — எப்போதும் அமெரிக்காவுக்கே முதலிடம்!” என்றும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ட்ரம்ப் மேற்கொண்டதாகக் கூறப்படும் ரஷ்யாவிலிருந்து டீசல் கொள்வனவு செய்வதற்கான உடன்பாடு, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆறு செனட் சபை உறுப்பினர்கள் அடங்கிய இரு கட்சிகளையும் சேர்ந்த குழுவொன்று, இந்த உடன்பாட்டை உடனடியாக மீளப் பெறுமாறு ட்ரம்ப் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கு ஆதரவா..! ட்ரம்பின் அதிரடி முடிவால் அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பு | Made The Right Choice Trump Defends

இந்தக் குழுவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

“ரஷ்யா உக்ரைன் பொதுமக்களைக் கொன்று வரும் நிலையில், புடினுக்கு நிதி ஆதரவை வழங்கும் வகையில் அமெரிக்கா செயற்படக் கூடாது” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ட்ரம்பின் இந்தத் திட்டம் தொடர்பில் ஏனைய குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

டெக்சாஸ் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மெக்கால் தெரிவிக்கையில், “டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தை நான் புரிந்துகொள்கிறேன்.

போர் நிறுத்தம் 

எனினும், ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது கிரெம்ளினின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதுடன், அண்மைய நாட்களில் நாம் கண்டதைப் போல மேலும் வன்முறைகளும் அழிவுகளும் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பதில் எனக்குக் கவலை உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உக்ரைனுக்கு புதிய ஜனாதிபதி ஒருவர் தேவை என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு ஆதரவா..! ட்ரம்பின் அதிரடி முடிவால் அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பு | Made The Right Choice Trump Defends

போர் நிறுத்தம் ஏற்படாத நிலையில், குறைந்தபட்சம் தற்போதைய சூழலில் உக்ரைனில் தேர்தலை நடத்துவதற்கு இது சரியான நேரமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து அதிருப்தி வெளியிட்ட ட்ரம்ப், உக்ரைன் மோதலை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கியத் தடையாக செலென்ஸ்கியே இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து உக்ரைன் ஜனாதிபதி தேர்தலை நடத்தவில்லை என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

யேமன் மற்றும் சவூதி அரேபியாவில் தீவிரமடையும் மோதல்கள்

யேமன் மற்றும் சவூதி அரேபியாவில் தீவிரமடையும் மோதல்கள்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து IMF வெளியிட்ட புதிய கணிப்பு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து IMF வெளியிட்ட புதிய கணிப்பு

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US