பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் புதிய விமான சேவைகள்
2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத பிற்பகுதியில் பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயார்வேஸ் உட்பட 4 விமான நிறுவனங்கள் இலங்கைக்கு தமது விமானச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.
பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயார்வேஸ், உஸ்பெகிஸ்தானின் சென்ட்ரம் எயார், பெலாரஸின் பெல வியாவிமானச் சேவை மற்றும் சுவிட்சர்லாந்தின் எடல்வைஸ் ஆகிய நான்கு விமான நிறுவனங்கள் இலங்கைக்கு தமது விமானச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதேவேளை, 2026ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,717,028 ஆக உயர்ந்துள்ளது.
சுற்றுலாத் துறை
அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்.

அத்துடன், பிரித்தானியா, சீனா, ஜேர்மனி மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏனைய பிரதான சுற்றுலாச் சந்தைகளாக விளங்குகின்றன.
இந்நிலையில் புதிய விமானச் சேவைகள் நாட்டின் சர்வதேச வான்வழித் தொடர்புகளுக்கும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் மேலும் பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.