வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இலங்கை! குசல் மெண்டிஸ் – கமிந்து மெண்டிஸ் அதிரடி
ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
அபார வெற்றி
இதன்படி, 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது.
இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ், ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 87 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கின.
அவருடன் இணைந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 27 பந்துகளில் 40 ஓட்டங்களையும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சினெத் ஜயவர்தன 26 பந்துகளில் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற போதிலும், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை 2–1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam