புலம்பெயர் தேசத்தில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழ் அமைப்புகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவும்! ஜனாதிபதியிடம் கோரிக்கை
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் ஆயுதம் தரித்த அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது, எனவே காலாவதியாகாத இந்த ஒப்பந்தின் சரத்தின்படி புலம்பெயர் தேசத்தில் இன்று வரை தடைசெய்யப்பட்ட சில தமிழ் மக்கள் மற்றும் சில தமிழ் அமைப்புக்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை இந்திய அரசும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோஸ் கட்சியின் ஊடக மாநாடு மட்டக்களப்பில் நேற்றைய தினம் (17.10.2026) இடம்பெற்றிருந்தது.
தமிழ் மக்களின் விலை மதிக்க முடியாத தியாகங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் போராட்டத்தின் உச்சகட்டம் தான் வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாணங்களுக்கான மாகாணசபை ஆட்சி முறை வந்தது இந்த மாகாணசபை ஆட்சி முறை வருவதற்காக தமிழ் மக்கள் விலை மதிக்க முடியாத உயிர் தியாகம் சொத்துகள் உட்பட பலதரப்பட்ட தியாகங்களை கொடுத்துள்ளனர்.
இந்த மாகாணசபை ஆட்சிமுறை 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் சொற்ப தீர்வான இந்த மாகாண சபை முறைமை வந்தது அதில் முதலாவது அம்சமாக ஆயுதம் தரித்த அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அந்த பொது மன்னிப்பு ஒட்டுமொத்தமாக இயக்கங்களில் இருந்த அனைவருக்கும் இருந்த போதும் தற்போது கூட புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழ் மக்கள், சில தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடை காரணமாக இலங்கைக்கு வரவேண்டிய கனிசமான பொருளாதாரம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தடைபட்டுக் கொண்டிருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் பல பேர் பல கோடி ரூபா பெறுமதியான முதலீடுகளை வைத்துக் கொண்டுள்ளனர்.

ஒப்பந்த மீளாய்வு
இந்த பணம் இலங்கைக்கு வருமாக இருந்தால் நாடு அபிவிருத்தியடையும், அதுமட்டுமல்ல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கிலுள்ள நகரங்கள், கிராமங்கள் அபிவிருத்தியடையும். எனவே இலங்கை அரசும் இந்தியா அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயமாகும்.
எனவே புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தடை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள சரத்தின்படி பொதுமன்னிப்பு வழங்கியே ஆக வேண்டும். இது தொடர்பாக இந்திய அரசும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் இந்தியா பாராமுகமாக இருக்க முடியாது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகவில்லை. ஆகவே அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை தற்போதைய ஜனாதிபதி அரசால் ஏற்படுத்த முடியும். எனவே புலம்பெயர் தேசத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் நபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் தமிழ் உறவுகளின் தடை நீக்கம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக இந்திய இலங்கை அரசு மற்றும் ஐ.நா சபைக்கு மனு வழங்கவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri