புழுகு மூட்டைகளுடன் உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகும் அரசாங்கம் : டக்ளஸ் சாடல்
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாத ஆட்சியாளர்கள் புழுகு மூட்டைகளுடன் உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகி வருவதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை காரியாலயமான ஸ்ரீதரில் இன்று (22) இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் களத்தில் தீர்க்கமான முடிவுகள்
கடந்த எமது ஆட்சியில் வாயைக் வயிற்றைக் கட்டி சேமித்த பணத்தையே தற்போதைய ஆட்சியாளர்களினால் தங்களின் பொருளாதார மீட்சியாக காட்சிப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாத ஆட்சியாளர்கள் புழுகு மூட்டைகளுடன் உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான தமிழ் தேசியத்தினை பாதுகாக்கும் யதார்த்தமான தரப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக தற்போது கடந்த காலங்களைப் போலல்லாது அரசியல் தளம் மாற்றமடைந்துள்ளது.
இது தமிழ் தரப்பினரின் அரசியல் களத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழலையும் உருவாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

அடிக்கடி வரும் உடல்நலப் பிரச்சனை, டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam
