ஹமாசுக்கு வைக்கப்படட சமாதானப் பொறி: வசமாக மாட்டிக்கொண்ட தலைவர்கள்!!
ஆயுதம் தாங்கிப் போராடிவருகின்ற ஒரு தரப்புக்கு- குறிப்பதாக மறைந்திருந்து தாக்குதல் நடாத்துகின்ற கரந்தடித் தாக்குதல் குழுக்களுக்கு- ‘சமாதானம்’ என்பது எப்பொழுதுமே அவர்களை வீழ்த்திவிடுகின்ற ஒருவகை பொரியாகத்தான் அமைந்திருக்கும்.
மறைந்திருந்து போர்புரிகின்றவர்களை தமது மறைவிடயங்களை விட்டு வெளியே வரவளைத்து, எதிரிகள் அவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காகவென்று உலகம் அமைத்துக்கொடுக்கின்ற ஒரு பாதகமான சந்தர்ப்பம்தான் ‘சமாதானப் பேச்சுவார்தைகள்’.
அண்மையில் ஹமாசுக்கு நடந்தது இதுதான்.
தமது நிலக்கீழ் தளங்களில் இருந்து ஹமாசின் தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும் வெளியே வரவவைத்து, அவர்களைச் சுதந்திரமாக நடமாடவிட்டு, அவர்களது நடமாட்டங்கள், தங்குமிடங்கள் அத்தனையையும் மிகத்துல்லியமாக அவதானித்து, அதன்பின்னர் அவர்கள் சற்றுமே எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது திடீரென்று தாக்குதல் மேற்கொண்டு அவர்களை அழித்த ஒருவகையிலான அதிரடி அம்புஷ் (Ambush) தாக்குதல்தான்- அண்மையில் இஸ்ரேல் மேற்கொண்ட காசா தாக்குதல்.
இந்த விடயம் பற்றி ஆழமாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
