அமெரிக்காவிற்கு தூதுவர் இன்றி திண்டாடும் அநுர!
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அமெரிக்க தூதுவர் நியமனத்திற்கு கூட ஆள்பற்றாக்குறை நிலவுகின்றதா என்ற கேள்வி அரசியல் தரப்புக்களில் எழுப்பபட்டு வருகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதி அநுர தரப்பிடம் ஆள்பற்றாக்குறை இருப்பதாக தெரியவில்லை எனவும், சரியான தெரிவுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கவில்லை எனவும் அமெரிக்க சாஸ்பெரி பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய அரசியல் தலைவர்கள் என்பதன் காரணமாக சில அரசியல் விடயங்களை புரிந்து கொள்வதற்கும் நடைமுறைபடுத்துவதற்கும் அவர்களுக்கு சரியான அனுபவமின்மை இருப்பதாக கீத பொன்கலன் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரமாக, தீர்வுகள் தொடர்பில் சிந்திப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் சாதாரண அரசியல் தலைவர்களை விட தேசிய மக்கள் சக்தி ஆட்சியாளர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 21 மணி நேரம் முன்

கர்ப்பமாக இருப்பது தெரிந்து ஆனந்தி எடுத்த அதிர்ச்சி முடிவு.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ Cineulagam
