வெளிநாடொன்றில் மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை
இந்தோனேசியாவில், தமிழ் நாட்டை சேர்ந்த மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கப்பல் துறையில் பணியாற்றி வந்த ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன் (34) மற்றும் கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோரே மரண தண்டனையை எதிர்நோக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மூவரும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் இந்தோனேசியாவின் கடல் எல்லையில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசிய சட்டம்
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை முதல் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கப்பலில் போதைப்பொருள் கடத்தியதாக குறித்த மூவரும் கைதாகியுள்ளனர்.
அவர்கள், சரக்கு கப்பலில் 106 கிலோ 'கிரிஸ்டல் மெத்' போதைப் பொருளை கடத்தியதாக கைது செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என மறுத்துள்ளனர்.
இதற்கு பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி கப்பலின் கேப்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த கப்பல் கேப்டன் ஒன்லைன் வாயிலாக குறைந்த நேரம் முன்னிலையாகியுள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட தமிழர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்தோனேசிய சட்டப்படி அந்த தமிழர்கள் மூவரும் மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதாக சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
