மின்வெட்டைத் தவிர்க்க முடியாது! வலுசக்தி அமைச்சர் பகிரங்க ஒப்புதல்
அரசு எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எதிர்காலத்தில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க முடியாமல் போகலாம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்று(17.03.2026) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மின்வெட்டு அறிவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கு மோதல்கள் வெடித்த போதே மின்வெட்டு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு எரிசக்தித் துறையைச் சரியாக முகாமைத்துவம் செய்ததாலேயே இதுவரை மின்வெட்டு இன்றி மின்சாரத்தை வழங்க முடிந்தது.

மின்வெட்டைத் தவிர்க்க அரசு தனது உச்சக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றது, இருப்பினும் ஒரு கட்டத்தில் மின்சார விநியோகத்தைத் தடை செய்ய வேண்டிய நிலைமை உருவாகலாம்.
தற்போதைய இக்கட்டான சூழலை அதிகாரிகள் மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகின்றனர் என்றும், முடிந்தவரை நீண்ட காலத்துக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் இதன்போது சபையில் உறுதியளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சபையில் முன்வைத்த தரவுகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam