வெள்ள நிலவரம் குறித்து முல்லைத்தீவில் அவசர கூட்டம்
முல்லைத்தீவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (29.11.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டமானது, பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்து கொண்டோர்
இதன்போது, மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புக்கள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியூதீன், காதர்மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன், து.ரவிகரன், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தரப்பு உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.














பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri