நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பான அறிக்கை இன்று (29) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
முக்கிய அறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக உருவெடுத்து திருகோணமலைக்கு வடகிழக்கே 310 கி.மீ தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
அது புயலாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் இன்றைய தினத்தின் பின்னர் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
