யாழ்.நவாலியில் விசமிகளால் சேதப்படுத்தப்பட்ட மாவீரர் நினைவாலயம்
யாழ்ப்பாணம் (Jaffna)- நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் ஒருவரின் நினைவாலயம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயமே இவ்வாறு விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஊர்மக்கள் விசனம்
இவர் கடந்த 1985ஆம் ஆண்டு வீர மரணம் அடைந்திருந்த நிலையில் அவரது நினைவாலயம் மேற்குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மாவீரர் நாளன்று பி.ப 06.05 மணிக்கு குறித்த நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று (28) காலை இந்தப் பகுதி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஊர்மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam