விளையாட்டுக்களில் மோசடிகள்: நேரடியாக முறையிடுமாறு அமைச்சர் கோரிக்கை
விளையாட்டு நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் நேரடியாகத் தெரிவிக்குமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
சுகததாச தேசிய விளையாட்டு வளாக அதிகாரசபையை நேற்று பார்வையிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
அரசியல் தொடர்பு
இதன்போது கருத்துரைத்த அமைச்சர், ''அரசியல் தொடர்புகள் மற்றும் கடந்த கால குறைபாடுகளை விட்டுவிட்டு முன்னேறவேண்டும்.
எனினும், நடந்துள்ள மோசடி மற்றும் ஊழல்களை புறக்கணிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தேசிய ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.
இதற்காக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால தேசிய திட்டங்களை நோக்கி முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.'' என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்''
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
