கதிர்காமத்தில் பந்தலமைக்க உதவி செய்யும் யானை: இணையத்தில் பரவும் காணொளி
கதிர்காம ஆலயத்தின் பழைய பந்தலை அகற்றி புதிய பந்தல் அமைக்கும் நிகழ்வு வாசனா என்ற யானையின் உதவியோடு இடம்பெற்றுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமகந்தனின் வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்பட்டு வெகுவிமர்சையாக இடம் பெற்று வருகின்றது.
யானையின் உதவி
கடந்த மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட உற்சவம் கதிர்காம ஆலயத்தின் பஷ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர தலைமையில் இடம் பெற்று வருகிறது.
அந்த வகையில் ஆறாவது நாலான நேற்றையதினம்(01) பிரதான கதிர்காமம் ஆலயத்தின் பழைய பந்தலை அகற்றி புதிய பந்தல் அமைக்கும் நிகழ்வு வாசனா என்ற யானையின் உதவியோடு இடம் பெற்றது.
இதன் போது ஆலயத்தின் பஷ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர , மற்றும் ஆலயத்தின் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.