நள்ளிரவில் பற்றி எரிந்த கார் - கொழும்பை உலுக்கிய இரட்டைக்கொலையில் சிஐடியினருக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்
அகுரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம், நேற்று நள்ளிரவு வேளையில் காலி, குட்டியாவத்தையில் உள்ள துணை வீதியில், பற்றி எரிந்த நிலையில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீப்பிடித்த நிலையில்..
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் குறித்த பகுதியில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, சம்பந்தப்பட்ட கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த கார் தொடர்பில் தடயவியல் அதிகாரிகள் உள்ளிட்ட புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri