Chatgptஇன் உதவியுடன் பல இலட்சம் கடனை ஒரே மாதத்தில் அடைத்த பெண்
Chatgpt கொடுத்த ஆலோசனையின் பேரில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 70 இலட்சம் பெறுமதியான கடனை ஒரே மாதத்தில் அடைந்துள்ளார்.
அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் வசிக்கும் 35 வயதான ஜெனிஃபர் ஆலன், ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வருகின்றார்.
அவருக்கு மகள் பிறந்த போது ஏற்பட்ட செலவுகள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு செலவுகள் அதிகரித்தமையால் சமீபத்தில் அவரது நிதி நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.
இதனால் அவர் க்ரெடிட் கார்டுகள் மூலம் இலங்கை மதிப்பில் 70 இலட்சம்(23,000 டொலர்) கடனை வாங்கியுள்ளார்.
Chatgptஇன் ஆலோசனைகள்
அவருக்கு தனது தொழிலில் போதியளவு வருமானம் இருந்த போதிலும் நிதியை கையாள்வது தொடர்பில் போதியளவு அறிவு இல்லாததால் கடனில் சிக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, Chatgptஇன் உதவியை நாடிய அவருக்கு, நிதியை கையாலாவது தொடர்பில் நாள்தோறும் ஆலோசனைகளை அது வழங்கியுள்ளது.
பயன்படுத்தப்படாத சந்தாக்களை இரத்து செய்வது, மறந்துபோன கணக்குகளில் உள்ள பயன்படுத்தப்படாத நிதியை அடையாளம் காண்பது போன்ற பல்வேறு ஆலோசனைகள் Chatgptஆல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தனது கடனில் 50 சதவீதத்தை அவர் ஒரே மாதத்தில் அடைந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
