முல்லைத்தீவில் மின்சார வேலியில் சிக்கிய காட்டுயானை உயிரிழப்பு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் விவசாயி ஒருவரால் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கிய காட்டுயானை உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கிராமத்தினரால் வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன் போது காட்டுயானை உயிரிழந்தமைக்கான காரணத்தினை வனஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவகுழுவினர் நேற்று (24.09.2023) சென்று பார்வையிட்டதுடன் மின்சாரம் தாக்கியே யானை உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து யானையின் உடலம் புதைக்கப்பட்டுள்ளது.
மேலும் யானை உயிரிழப்பு தொடர்பிலான விசாரணையினை முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் முத்தையன் கட்டு மூன்றாம் கண்டம், கனகரத்தினபுரம், மன்னாகண்டல் பகுதிகளில் தற்போது காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri