அரசாங்கத்தின் புதிய சட்டமூலம் அரசியல் அமைப்பு சுதந்திரத்தை நீக்குகிறது: ஜோசப் ஸ்டாலின் விசனம்
அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமூலத்திற்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
“நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்” என்ற சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது மக்களுக்கு தகவல்களை வழங்கும், அலைவரிசைகளை அரசாங்கம் கட்டுப்படுத்துவது பாரதூரமான நிலைமையாகும் எனவும், இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக நாங்கள் பார்க்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் பெறுமதியான பொருட்கள் தொடர்பில் புலனாய்வு தகவல்: தீவிரமடையும் அகழ்வுப்பணி(Photos)
இணையம் ஊடாக தகவல்கள் பரிமாற்றம்
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
''இந்தச் சட்ட மூலம் இணையம் ஊடாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும்போது அந்தத் தகவல் சரியானதா அல்லது அதனால் ஏற்படும் பாரபட்சம் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை, அரசியல் அமைப்பு நமக்கு அளித்துள்ள உரிமை, தகவல் அறியும் உரிமை, பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை அழிக்கவே இந்தச் செயற்பாடுகள் செய்யப்படுகின்றன.
நியூயோர்க்கில் ஜனாதிபதி
நியூயோர்க்கில், செப்டெம்பர் 21ஆம் திகதி அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது அமர்வில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்ப கட்டத்துடன் ஒப்பிடும்போது உலகில் பாதுகாப்பு கூட்டணிகள் தற்போது விரிவடைந்துள்ளதாகவும், பழைய மற்றும் புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில், அதற்கு ஏற்ப வியூகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதற்கமைய டிஜிட்டல் பிளவு, கடன் நெருக்கடி மற்றும் எரிசக்தி ஆதாரங்களின் பரிணாமம் ஆகியவை வடக்கு மற்றும் தெற்கு இடையே உலகளாவிய பிளவை விரிவுபடுத்துகின்றன'' என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan