ஜனாதிபதி அநுரவிடம், சஜித் எழுப்பியுள்ள கேள்வி
20-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவைப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு, 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஏன் தேவையில்லை என்று ஜனாதிபதியிடம் தாம் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரத்தொட்ட பகுதியில் நடைபெற்ற கட்சியின் மகளிர் அணிக் கூட்டமொன்றில் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது, அன்றைய அரசாங்கம் 20-ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்த வேளையில் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் எனக் கூறியிருந்தார்.

ஆனால் இன்று, 22-ஆவது திருத்தத்திற்குச் சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என அரசாங்கத்தில் உள்ளவர்களே கூறி வருவதாகச் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தினமும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுச் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்துள்ள சூழலில், 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதித்து, சட்டத்தின் ஆட்சியை மேலும் சீரழிக்கும் என தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மனிதநேயமற்ற, மனித உரிமைகளை மீறுகின்ற, மக்கள் நலனுக்கு முன்னுரிமை தராத மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பொருட்படுத்தாத ஒரு அரசாங்கமாகும் என சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri