மின் கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சர் கஞ்சனவின் அறிவிப்பு
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவு முன்வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மின் கட்டணத் திருத்தம்
ஜனவரி மாதத்தில் மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Instructions have been given to the CEB management to suspend and take appropriate disciplinary action against any employee that disrupts the services or acts in violation of the guidelines issued by the CEB management.
— Kanchana Wijesekera (@kanchana_wij) January 3, 2024
The proposed reforms of CEB will be presented to the…
மேலும், மின் கட்டணத் திருத்தம் நுகர்வோருக்கு சாதகமான வகையில் அமையும் எனவும் இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவான சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்ற அங்கீகாரம் விரைவில் பெறப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |