நாட்டை விட்டு வெளியேற மின்சார சபை பொறியியலாளர்கள் திட்டம்! வெளியாகியுள்ள தகவல்
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்து வருவதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இ.மி.சபையின் பெறியியலாளர்கள்
இலங்கை மின்சார சபையினைச் சேர்ந்த 100 பொறியியலாளர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தொழில்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
தாங்கள் வெளிநாடு செல்ல உள்ளதாக சில பொறியியலாளர்கள் இலங்கை மின்சார சபைக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்துள்ளனர்.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் வெளியாகவுள்ள அறிவிப்பு |
சேவையை வழங்க முடியவில்லை
இலவச கல்வியின் மூலம் பொறியியலாளர்களாக உருவாகிய தாம் நாட்டுக்கு சேவையாற்ற கனவு கண்ட போதிலும் கடந்த காலங்களில் நாட்டுக்காக நேர்மையான சேவையை வழங்க முடியவில்லை என சில பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பல நாடுகளில் பொறியியலாளர்களுக்கு நல்ல கேள்வி நிலவி வருவதாகவும் தமதும், தமது பிள்ளைகளினதும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையைச் சேர்ந்த பல பொறியியலாளர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை புதுப்பித்துக் கொள்வதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.