வெருகல் ஆற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
திருகோணமலை- வெருகல் ஆற்றிலிருந்து, உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(10.6.2026) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
உயிரிழந்த முதியவர் கடந்த சில நாட்களாக வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வெருகல் ஆலய வளாகத்தில் தங்கியிருந்ததாகத் தெரியவருகிறது.
இந்நிலைமையில், அவர் வெருகல் ஆற்றுக்குத் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றபோது, எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள ஆற்றங்கரைப் பகுதியிலிருந்து, பாதணி, மின்சூளட்டி , தண்ணீர் கொள்கலன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam